'இண்டிகோ' நிறுவன சி.இ.ஓ., பீட்டர் எல்பர்ஸ் ராஜினாமா

புதுடில்லி:இண்டிகோ விமான நிறுவனத்தின் சி.இ.ஓ., பீட்டர் எல்பர்ஸ் ராஜினாமா செய்துள்ளார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் பாட்டியா தற்காலிகமாக அந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.

கடந்த 2025, டிசம்பர் 3 மற்றும் 5ம் தேதிகளுக்கிடையே, இண்டிகோ நிறுவனத்தின் 2,500 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சுமார் 1,900 விமானங்கள் தாமதமாகின. நாடு முழுதும் 3 லட்சத்துக்கும் அதிகமான விமான பயணியர் பாதிக்கப்பட்டனர்.

விமானிகள் பணிநேரம் குறித்த விமான நிலைய இயக்குநரகத்தின் புதிய விதிகளை பின்பற்ற தவறியதால், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது இதற்கு காரணமாக கூறப்பட்டது.

இதனால் இண்டிகோ நிறுவனத்துக்கு 2,000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது நாடு முழுதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, விமான போக்குவரத்து இயக்குநரகம் இண்டிகோ நிறுவனத்துக்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. தொடர்ந்து அவ்வப்போது இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருவதும் வாடிக்கையாக இருந்தது.

இந்நிலையில், இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் அவியேஷன் லிமிடெட்டின் இயக்குநர்கள் குழு, பீட்டர் எல்பர்ஸின் ராஜினாமாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

Source link