இதுவரை சாம்பியன்: ஐ.பி.எல்., அட்டவணை

ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக முறை (5) கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் சென்னை (2010, 2011, 2018, 2021, 2023), மும்பை (2013, 2015, 2017, 2019, 2020) முதலிடத்தில் உள்ளன. கொல்கட்டா 3 (2012, 2014, 2024), பெங்களூரு (2025), குஜராத் (2022), ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009) தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

* பஞ்சாப், டில்லி, லக்னோ அணிகள் ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை.

பைனல் செல்லும் பாதை

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் ‘ஏ’, ‘பி’ என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், மற்ற அணிகளுடன் தலா 1 முறை (4 போட்டி) மோதும். அடுத்த பிரிவில் உள்ள 5 அணிகளுடன் தலா இரு மோதும் (10 போட்டி). இதன் படி ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டியில் பங்கேற்கும்.

* புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் தகுதிச்சுற்று 1ல் மோதும். வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும்.

* 3, 4 வது இடம் பிடிக்கும் அணிகள் ‘எலிமினேட்டர்’ போட்டியில் மோதும். வெல்லும் அணி தகுதிச்சுற்று 2க்கு முன்னேறும். தோற்கும் அணி வெளியேறும்.

* தகுதிச்சுற்று 1ல் தோற்ற, ‘எலிமினேட்டர்’ போட்டியில் வென்ற அணிகள் தகுதிச்சுற்று 2ல் மோதும். வெல்லும் அணி பைனலுக்கு செல்லும். தோற்கும் அணிக்கு 3வது இடம் கிடைக்கும்.

* தகுதிச்சுற்று 1, 2ல் வென்ற அணிகள் மே 31 ல், நடக்கவுள்ள பைனலில் மோதும்.

‘ஏ’ பிரிவு: சென்னை, கோல்கட்டா, ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப்.

‘பி’ பிரிவு: மும்பை, ஐதராபாத், குஜராத், டில்லி, லக்னோ.

65 நாள், 74 போட்டி

ஐ.பி.எல்., தொடரின் 19வது சீசன் இன்று துவங்குகிறது. மே 24 வரை லீக் சுற்றில் 70 போட்டிகள் நடக்கும். அடுத்து ‘பிளே ஆப்’ சுற்றில் 4 என மொத்தம் 65 நாளில், 74 போட்டிகள் நடக்க உள்ளன.

* சென்னையில் சேப்பாக்கம், மும்பை வான்கடே, கொல்கட்டா ஈடன் கார்டன் உட்பட 13 மைதானங்களில் போட்டிகள் நடக்கும்.

Source link