இத்தாலி அணி வெற்றி * உலக கோப்பை கால்பந்தில்…

பெர்காமோ: உலக கோப்பை கால்பந்து தகுதி போட்டியில் இத்தாலி அணி 2-0 என வடக்கு அயர்லாந்து அணியை வீழ்த்தியது.

‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. ஐரோப்பிய அணிகளுக்கான இரண்டாவது கட்ட தகுதிச்சுற்றில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான ‘ஏ’ பிரிவு அரையிறுதியில், இத்தாலி-வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின.

இத்தாலியின் பெர்காமோ நகரில் நடந்த இப்போட்டியில் இத்தாலி அணிக்கு டொனாலி (56), கியன் (80) கைகொடுக்க 2-0 என வெற்றி பெற்றது. அடுத்து வரும் 31ல் நடக்கும் பைனலில் இத்தாலி, போஸ்னியாவை சந்திக்கிறது. இதில் வெல்லும் அணி, உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறும்.

Source link