'இந்தாண்டுக்குள் தங்கம் விலை ரூ.5.73 லட்சத்தை தொடும்' : வெள்ளி சரிந்து உயர்வு காணும்

‘இந்தாண்டுக்குள் ஒரு அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கம் விலை, 6,300 அமெரிக்க டாலர், அதாவது, இந்திய மதிப்பில் 5.73 லட்சம் ரூபாயை தொடும்’ என, சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான ‘ஜே.பி.மோர்கன்’ கணித்துள்ளது.


மேலும் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சர்வதேச சந்தையில், இந்தாண்டு, இதுவரை கிட்டத்தட்ட 20 சதவீதம் அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து, மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த செவ்வாயன்று 4.78 லட்சம் ரூபாயாக இருந்தது.

கடந்த ஜன.29ல் புதிய உச்சமாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5.09 லட்சம் ரூபாயாக அதிகரித்தது. மத்திய வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்குவதன் காரணமாக, இந்தாண்டு இறுதி வரை, தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் நீடிக்கும். இதனால், தேவை அதிகரித்து, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5.73 லட்சம் ரூபாயை தொடும்.

கடந்தாண்டு புவிசார் அரசியல் பதற்றம், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்பு, மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்தது, தங்கம் சார்ந்த இ.டி.எப்., முதலீடு அதிகரிப்பு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு வழிவகுத்தன.

இவ்வாறு தெரிவித்து உள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கலவையான சூழல் உள்ளது. ‘பேங்க் ஆப் அமெரிக்கா’ வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 12 மாதங்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 5.46 லட்சம் ரூபாயை தொடும்.

ஆனால், வெள்ளி விலை மேலும் சரிவை கண்டு, பின்னர் உயர துவங்கும் என தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி இறுதியில், ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 11,069 ரூபாய் என்கின்ற புதிய உச்சத்தை தொட்டிருந்தது.

கடந்த புதனன்று ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 8,254 ரூபாயாக இருந்தது.

இந்தாண்டு இறுதிக்குள் மீண்டும் 9,100 ரூபாயை தாண்டும் என பேங்க் ஆப் அமெரிக்கா கணித்துள்ளது.

Source link