இந்தியன் வெல்ஸ் ஓபன்: பைனலில் சபலென்கா

இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ்
நகரில், டபிள்யு.டி.ஏ., பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர்
பிரிவு அரையிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற நேர் செட்
கணக்கில் செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை தோற்கடித்தார். மற்றொரு
அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 7-5, 6-4 என உக்ரைனின் எலினா
ஸ்விடோலினாவை வென்றார்.

அரையிறுதியில் சீனா

பெர்த்: ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. பெர்த்தில் நடந்த காலிறுதியில் சீனதைபே, சீனா அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 0-0 என சமநிலையில் இருந்தது. பின் கூடுதல் நேரத்தில் சீன அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதியில் (மார்ச் 17, பெர்த்) சீனா, ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன.

இளம் வீரர் கிமி

ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில், நடப்பு ஆண்டுக்கான ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1’ கார்பந்தயத்தின் 2வது சுற்று நடக்கிறது. இதன் தகுதிச்சுற்றில் அசத்திய ‘மெர்சிடஸ்’ அணியின் இத்தாலி வீரர் கிமி ஆன்டோனெல்லி 19, இலக்கை ஒரு மணி நேரம், 32 நிமிடம், 064 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். ‘பார்முலா-1’ பைனலை முதலிடத்தில் இருந்து துவக்கும் இளம் வீரர் என்ற சாதனை படைத்தார் கிமி.

எக்ஸ்டிராஸ்

* கொல்கட்டாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கரன் சிங் 2-6, 6-4, 7-5 என, சகவீரர் சித்தார்த் ரவாத்தை வீழ்த்தினார். பைனலில் கரன் சிங், ஆஸ்திரேலியாவின் பிலிப் செகுலிக்கை சந்திக்கிறார்.

* சுவிட்சர்லாந்தில் நடக்கும் சுவிஸ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தருண், இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகா கின்டிங் மோதினர். இதில் தருண் 19-21, 21-19, 13-21 என்ற கணக்கில் போராடி தோல்விய அடைந்தார்.

* அமெரிக்காவின் இந்தியன் வெல்சில் நடக்கும் ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் கோரன்சன் ஜோடி 5-7, 7-6, 5-10 என பிரான்சின் ஆர்தர் ரின்டெர்க்னெக், மொனாகோவின் வாலன்டின் வாசெரோட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

* பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான டில்லி அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் விலகினார். இம்முறை வர்ணனையாளராக பணியாற்ற உள்ளார்.

Source link