வாஷிங்டன்: இந்தியா, அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்த செயல் திட்டம் கூட்டாக நேற்று அறிவிக்கப்ப ட்டது.
இது குறி த்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் சமூக வலைதள பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரையு ம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை உறுதியாக குறிப்பிடும் வகையிலான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
யு.எஸ்.டி. ஆர்., என்ற பெயரிலான அந்த வலைதளத்தில் வெ ளி யான இந்திய வரைபடத்தில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டுமின்றி, சீனா உரிமை கோரும், லடா க்கின் அக்சாய் சின், அருணாச்சல பிரதேசம் ஆகி யவை இந்திய எல்லைகளாக இடம்பெற்றுள்ளன.
நம் அண்டை நாடுகளின் நீண்ட கா ல சர்ச்சை கருத்துகளுக்கு பதில் அளிப்பதாக, அ மெரிக்காவின் அதிகாரப்பூர்வ அரசு துறையின் சமூகவலை தளத்தில் இந்திய வரைபடம் சரியாக இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா இதற்கு முன் வெளியிட்டுள்ள இந்திய வரைபடத்தில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
