இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * ஜூனியர் பாட்மின்டனில்…

அஸ்டுரியாஸ்: ஜூனியர் பாடமின்டனில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் இந்தியா தங்கம் வென்றது.

ஸ்பெயினில் சர்வதேச ‘ஜூனியர்’ ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷ் அகர்வால், ஹரிஷ்ராகவேந்திரன் வைத்தியநாதன் ஜோடி, ஸ்பெயினின் ஜோயல் ஆல்வரஸ், அட்ரியன் ரோட்ரிக்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. 24 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-12, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.

கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஹரிஷ்ராகவேந்திரன் வைத்தியநாதன், ஜனனிகா ஜோடி, மியா பாக்ஸ், டின் விங் வாங் ஜோடியை சந்தித்தது.

இதில் முதல் செட்டை இந்திய ஜோடி 17-21 என இழந்தது. பின் சுதாரித்துக் கொண்ட இந்திய ஜோடி அடுத்த இரு செட்டுகளை 21-13, 22-20 என வசப்படுத்தியது.

57 நிமிடம் நீடித்த பைனலின் முடிவில் இந்திய ஜோடி 17-21, 21-13, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது.

Source link