இந்தியாவுக்கு 10 பதக்கம் * ஆசிய வில்வித்தையில் அபாரம்

பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசிய வில்வித்தை ‘ஸ்டேஜ் 1’ தொடர் நடந்தது. காம்பவுண்டு பிரிவில் கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் ரஜத் சவுகான், சிகிதா ஜோடி, 158-156 என மலேசியாவின் ஜுவைதி, மாட் சலே ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றியது.

காம்பவுண்டு தனிநபர் பிரிவு பைனலில் இந்தியாவின் உதய் கம்போஜ் 145-144 என சக வீரர் பிரதமேஷ் ஜவஹரை வென்றார். ரஜத் சவுகான் 145-144 என தாய்லாந்தின் பீராவத்தை சாய்த்து, வெண்கலம் வென்றார். இப்பிரிவில் மூன்று பதக்கங்களையும் இந்தியா வென்றது.

காம்பவுண்டு பெண்கள் அணிகளுக்கான பைனலில் இந்திய அணி (ராஜ் கவுர், தேஜல், சிகிதா), 227-229 என கஜகஸ்தானிடம் தோற்று, வெள்ளி கைப்பற்றியது.

ஆண்களுக்கான ரிகர்வ் அணிகள் பைனலில் இந்தியாவின் ஜுயல், தேவாங்க், சுஹ்ஜெய்ன் இடம் பெற்ற அணி, 4-5 என கஜகஸ்தானிடம் தோற்க, வெள்ளி கிடைத்தது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கம் கிடைத்தன.

Source link