நோவி சாத்: செர்பியாவின் நோவி சாத் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சார்பில் ‘யூத் கன்டெண்டர்’ தொடர் நடந்தது. 19 வயது பிரிவு பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் ஷிரியா ஆனந்த், ருமேனியாவின் அலெசியாவை எதிர்கொண்டார்.
இதில் ஷிரியா 0-3 என (8-11, 3-11, 9-11) நேர் செட் கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ஆண்கள் 17 வயது பிரிவு பைனலில் இந்தியாவின் நிக்கில் மன்னத், தென் கொரியாவின் லின் சின் டிங்கை சந்தித்தார். இதில் 0-3 என்ற (8-11, 2-11, 7-11) கணக்கில் தோல்வியடைந்த நிக்கில், வெள்ளிப்பதக்கம் பெற்றார்.இத்தொடரில் இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம் கிடைத்தன.
