புதுடெல்லி,
இந்தியா கூட்டணிக்கு போட்டியாக டெல்லியில் நாளை பாஜக பேரணி நடத்த உள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம் இப்போது பெரிதாக வெடித்துள்ளது. ஏற்கனவே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் இது தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதேபோல எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் இதை கையில் எடுத்து போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் நவம்பர் 1-ம் தேதி பேரணி நடத்துகிறது.
ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொள்கிறார்கள்.
இந்தநிலையில் இந்தியா கூட்டணிக்கு போட்டியாக பாஜக நாளை டெல்லியில் பேரணி நடத்துகிறது. செங்கோட்டையில் இருந்து சாந்தினி சவுக் நோக்கி இந்த பேரணியை நடத்த பாஜக திட்டமிடப்பட்டுள்ளது.
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்டா உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
