இந்தியா-தாய்லாந்து 'டிரா' * நட்பு கால்பந்தில்…

லாப்புரி: இந்தியா, தாய்லாந்து இளம் அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர், வரும் 2026, மே 7-24ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இந்திய அணி 10 வது முறையாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய அணி, தாய்லாந்து சென்றுள்ளது.

இங்கு தாய்லாந்து, இந்தோனேஷியா, தென் கொரியாவுடன் நட்பு போட்டிகளில் பங்கேற்கிறது.

லாப்புரியில் நடந்த போட்டியில் இந்தியா-தாய்லாந்து அணிகள் மோதின. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ஆனது. இந்திய சார்பில் டென்னி சிங், கன்லெய்பா தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி நாளை தனது இரண்டாவது போட்டியில் இந்தோனேஷியாவை சந்திக்க உள்ளது.

Source link