இந்தியா-தென் ஆப்ரிக்கா மோதல்

ஜோகனஸ்பர்க்: இந்தியா, தென் ஆப்ரிக்க பெண்கள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி கெபேஹாவில் நடக்க உள்ளது.

தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய அணி, ஒரு டெஸ்ட், மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி கெபேஹாவில் வரும் டிச. 20-23 என நான்கு நாள் நடக்க உள்ளது.

முன்னதாக ஒருநாள் போட்டிகள் போட்செப்ஸ்ட்ரூம் (டிச. 9), புளோயம்போன்டீன் (டிச. 12), கேப்டவுடனில் (டிச. 15) நடக்கும்.

இதுகுறித்து தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தியில்,’ இந்திய பெண்கள் அணி, தென் ஆப்ரிக்க மண்ணில் 3 ஒருநாள், 1 டெஸ்டில் பங்கேற்க உள்ளது. டெஸ்ட் போட்டி கெபேஹாவில் உள்ள, செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடக்கும். இது, இரு அணிகள் மோதும் 4வது டெஸ்ட், தவிர, 1960, டிச., க்குப் பின் இங்கு நடக்கும் முதல் பெண்கள் டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது,’ என தெரிவித்துள்ளது.

அட்டவணை

தேதி போட்டி இடம்

டிச. 9 முதல் ஒருநாள் போட்செப்ஸ்ட்ரூம்

டிச. 12 2வது ஒருநாள் புயோயம்போன்டீன்

டிச. 15 3வது ஒருநாள் கேப்டவுன்

டிச. 20-23 டெஸ்ட் கெபேஹா

Source link