இந்தியா நோக்கி வந்த கப்பல் மீது தாக்குதல்: 3 மாலுமிகள் மாயம்

டெஹ்ரான்: இந்தியா நோக்கி வந்த கப்பல் மீது ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 3 பேரை காணவில்லை.

மேற்காசியாவில் நடக்கும் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் கண்ட்லா துறைமுகம் நோக்கி கிளம்பியது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே இந்த கப்பல் வந்த போது, தாக்குதல் நடத்தப்பட்டதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது. உடனடியாக இந்த கப்பலில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டு விட்டதாகவும், 3 பேரை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

யார் தாக்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Source link