இந்தியா நோக்கி வரும் 2 எல்பிஜி டேங்கர்கள்: போர்க்கப்பல்கள் பாதுகாப்பு

புதுடில்லி: எல்பிஜி எரிவாயு உடன் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரண்டு எல்பிஜி டாங்கர்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வந்து கொண்டுள்ளது. இதற்கு இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றன.

தற்போது ஓமன் வளைகுடாவில் இருக்கும் இந்த கட்டல்கள், ஜக் வசந்த் மற்றும் பைன் காஸ் ஆகிய கப்பல்கள் அருகருகே உள்ளன. இவற்றில் 92,612 டன் எல்பிஜி உள்ளதாக துறைமுகங்களுக்கான சிறப்பு செயலர் ராஜேஷ் குமார் சின்ஹா கூறியுள்ளார். ஈரானின் லாரக் மற்றும் குயிஷம் தீவுகள் வழியாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன. இக்கப்பல்கள் முறையே வரும் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்திய துறைமுகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கப்பல்களில் 33 மற்றும் 27 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே ஷிவாலிக் மற்றும் நந்தாதேவி ஆகிய கப்பல்கள் 92,712 டன் எல்பிஜி உடன் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.

Source link