இந்திய அணிக்கு பாராட்டு: பி.சி.சி.ஐ., விருது விழாவில்

மும்பை: பி.சி.சி.ஐ., விருது வழங்கும் நிகழ்ச்சியில், உலக கோப்பை வென்ற இந்திய அணிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படும். கடந்த ஆண்டு சாதித்தவர்களுக்கான, ‘நமன்’ விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று டில்லியில் நடக்கவுள்ளது.

இதில், சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது, இந்திய டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, சிறந்த வீராங்கனைக்கான விருதை 5வது முறையாக பெறுகிறார். முன்னாள் இந்திய வீரர்களான ராகுல் டிராவிட், ஸ்டூவர்ட் பின்னி, முன்னாள் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர், சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுகின்றனர்.

சமீபத்தில் ‘டி-20’ உலக கோப்பை கைப்பற்றிய சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியினருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதுபோல, கடந்த ஆண்டு உலக கோப்பை (50 ஓவர்) கைப்பற்றிய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றிய ரோகித் சர்மாவின் இந்திய ஆண்கள் அணிகளும் பாராட்டப்படுகின்றன. தவிர, கடந்த ஆண்டு 19 வயதுக்கு உட்பட்ட ‘டி-20’ உலக கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணி, சமீபத்தில் 19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை (50 ஓவர்) கைப்பற்றிய இந்திய ஆண்கள் அணிகளுக்கும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

Source link