இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்தப் பிறகு, மூன்று பார்மெட் அணிகளும் பலவீனமடைந்து வருகிறது. முதலில் டெஸ்ட் அணி, அடுத்து டி20 அணி, தற்போது ஒருநாள் அணியும் பலவீனமடைந்து வருகிறது.
குறிப்பாக, தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்தப் பிறகுதான், மூன்று பார்மெட் அணிகளும் பலவீனமடைந்துள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக ஆலோசிக்க, பிசிசிஐ மீட்டிங் நடைபெற்றது.
அப்போது, கம்பீர் செய்த தவறுகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், கம்பீர் செய்த 11 மோசமான விஷயங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.
1.ரோஹித் கேப்டன்: இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கி, அவசர அவசரமாக ஷுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவியை கொடுத்தனர். கம்பீரின் பரிந்துரையில்தான், கில்லுக்கு கேப்டன் பதவியை கொடுத்தனர். அதன்பிறகுதான், ஒருநாள் அணி பலவீனமடைய ஆரம்பித்தது.
2.சூர்யகுமார் யாதவ் நீக்கம்: டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் கோப்பை வென்றுகொடுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவை, அதன்பிறகு டி20 அணியில் இருந்து நீக்கியதும் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. கம்பீர், பருந்துரையில்தான் பிசிசிஐ இதனை செய்ததாம்.
3.குல்தீப் யாதவ் நீக்கம்: தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வந்த குல்தீப் யாதவை, திடீரென்று மூன்று பார்மெட்டில் இருந்தும், கம்பீர் நீக்கினார். அதன்பிறகு, சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு மட்டுமே அணியில் முக்கியத்தும் கொடுக்கப்பட்டது.
4.கோலி, ரோஹித் ஓய்வு: கடந்த ஆண்டில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் திடீரென்று ரோஹித், கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், இருவரையும் சேர்க்க கூடாது என பிசிசிஐக்கு கம்பீர் கோரிக்கை வைத்தப் பிறகுதான், இருவரும் ஓய்வு அறிவித்ததாக கருதப்படுகிறது. அதன்பிறகு, இந்திய டெஸ்ட் அணி, பெரிய அளவில் சொதப்ப ஆரம்பித்தது.
5.துணைக் கேப்டன் தேர்வு: கம்பீர் வந்தப் பிறகு, மூன்று பார்மெட்டிலும், நிலையான துணைக் கேப்டன் இல்லை.
6.கோலி, ரோஹித்துக்கு நெருக்கடி: ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடருக்கு கோலி, ரோஹித்தின் இடம் உறுதி என அறிவிக்காமல், இருவரையும் தொடர்ச்சியாக அழுத்தத்திலேயே வைத்திருக்கிறார்.
7.சிராஜ் நீக்கம்: தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீசி வந்த முகமது சிராஜை, ஒருநாள் பார்மெட்டில் இருந்து திடீரென்று நீக்கிவிட்டு, ஹர்ஷித் ராணாவுக்கு, கம்பீர் ரெகுலராக வாய்ப்பு கொடுத்தார்.
8.ஜடேஜா நீக்கம்: ஒருநாள் பார்மெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜாவை திடீரென்று நீக்கிவிட்டு, மாற்றாக அக்சர் படேலை விளையாட வைத்து வருகின்றனர். ஆனால், அக்சரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
9.ஷமி நீக்கம்: மூன்று பார்மெட்களிலும் இருந்து, முகமது ஷமியை திடீரென்று கம்பீர் ஓரங்கட்டினார்.
10.பிடித்த வீரருக்கு இடம்: வேறு எந்த பயிற்சியாளரும் சந்திக்காம விமர்சனத்தை தற்போது கம்பீர் சந்தித்து வருகிறார். அதாவது, தனக்கு பிடித்த வீரருக்கு, அணியில் முன்னுரிமை கொடுத்து வருகிறார். ஹர்ஷித் ராணா போன்றவர்கள் எவ்வளவு சொதப்பினாலும், ரெகுலராக, அணியில் இடம் பிடிக்கின்றனர்.
11.திறமையானவர்கள் புறக்கணிப்பு: கருண் நாயர், சர்பரஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், ராஜத் டிதர், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார் போன்ற திறமையான வீரர்கள் இருந்தும், இவர்களை கம்பீர் தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறார்.
இப்படி, தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றப் பிறகு, இந்திய அணியில் பல சர்ச்சைகள் இடம்பெற்றுள்ளன. விரைவில், இதுகுறித்து விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
