இந்திய இளம் பெண்கள் அசத்தல் * நட்பு கால்பந்தில்…

லிடின்கோ: நட்பு கால்பந்தில் இளம் இந்திய பெண்கள் அணி 5-2 என்ற கோல் கணக்கில் சுவீடன் கிளப் அணியை வென்றது.

தாய்லாந்தில் பெண்களுக்கான (20 வயதுக்கு உட்பட்ட) ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 12வது சீசன், வரும் ஏப். 1-18ல் நடக்கவுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்ற இந்தியா, ‘குரூப் ஆப் டெத்’ என்றழைக்கப்படும் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. 6 முறை கோப்பை வென்ற, ஆசியாவின் ‘நம்பர்-1’ அணி, நடப்பு சாம்பியன் ஜப்பான், வலிமையான ஆஸ்திரேலியா, சீன தைபே அணிகள் உள்ளன.

இதற்குத் தயாராகும் வகையில் இந்திய அணி, நட்பு போட்டிகளில் பங்கேற்கிறது. சுவீடனின், லிடின்கோ நகரில் உள்ள போசன் தேசிய விளையாட்டு மையத்தில் நடந்த போட்டியில் இந்தியா, உள்ளூர் கிளப் அணியான அல்வ்ஸ்ஜோவை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியாவின் லின்ங்தெய்கிம் கிப்கென் (1, 20, 59 வது நிமிடம்), ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். சிண்டி (34), சுலன்ஜனா (90) தலா ஒரு கோல் அடித்தனர்.

Source link