மும்பை: இந்திய ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங், அபே சிங் சாம்பியன் பட்டம் வென்றனர்.
மும்பையில், இந்திய ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ஹனா மோதாஸ் மோதினர். முதலிரண்டு செட்டை 11-5, 11-6 எனக் கைப்பற்றிய அனாஹத், 3வது செட்டை 9-11 என இழந்தார். பின் எழுச்சி கண்ட இவர், 4வது செட்டை 11-6 என தன்வசப்படுத்தினார்.
மொத்தம் 34 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் அனாஹத் 3-1 (11-5, 11-6, 9-11, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான பைனலில் இந்தியாவின் வீர் சோட்ரானி, அபே சிங் மோதினர். இதில் அபே சிங் 3-0 (11-9, 11-8, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
