இந்திய சோலார் பேனல்களுக்கு 126 சதவிகிதம் வரி விதித்தது அமெரிக்கா

நியூயார்க்: இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் சோலார் பேனல்கள் மற்றும் போட்டோவோல்டிக் செல்களுக்கு 126 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்து உள்ளது.

இது குறித்து, அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

இந்தியாவில், சோலார் பொருள்களின் உற்பத்திக்காக அந்நாட்டு அரசு அளவுக்கு அதிக மானியங்களை வழங்குகிறது. இதனால், அங்கிருந்து சோலார் பேனல்கள், போட்டோவோல்டிக் செல்களை இறக்குமதி செய்யும்போது, விலை போட்டியால் உள்நாட்டு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்திய சோலார் பொருள்களுக்கு முதல் கட்டமாக 126 சதவீத இறக்குமதி வரி நிர்ணயிக்கப்படுகிறது.

இதே காரணங்களுக்காக, இந்தோனேஷிய சோலார் பொருள்களுக்கு 81 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி 143 சதவீதமாகவும், லாவோஸ் சோலார் பொருள்களுக்கு 81 சதவீத இறக்குமதி வரியும் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உயர் வரி விதிக்கப்பட்டுள்ள இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ் ஆகிய மூன்று நாடுகள் மட்டும், கடந்த 2025ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்காவின் சோலார் பேனல் இறக்குமதியில், 57 சதவீதம் பங்கு வகித்தன.

ஏற்கெனவே, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது இதே போன்ற உயர் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, சூரிய மின்சார உற்பத்தியாளர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாறியிருந்தனர். தற்போதைய வரி உயர்வு, அமெரிக்க நுகர்வோரையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோலார் பங்குகள் 11 சதவீதம் சரிவு அமெரிக்க வரி விதிப்பு அறிவிப்பை தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தையில் சோலார் உபகரணங்கள் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகள் நேற்று 11 சதவீதம் வரை சரிவுடன் நிறைவடைந்தன.

மும்பை பங்கு சந்தையில் சரிவை கண்ட நிறுவனங்கள் நிறுவனம் சரிவு (%) வாரி எனர்ஜீஸ் 10.47% பிரீமியர் எனர்ஜீஸ் 6.27% விக்ரம் சோலார் 5.45% ஸ்டெர்லிங் அண்டு வில்சன் 1.05%

Source link