இந்திய பங்குச்சந்தையின் கரடியின் ஆதிக்கம்; சென்செக்ஸ் 912 புள்ளிகள் சரிவு

நமது நிருபர்

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 912 புள்ளிகள் குறைந்து 77,174 புள்ளிகளாக வர்த்தகமாகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்ததன் விளைவாக, பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது.

இந்நிலையில், வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 912 புள்ளிகள் குறைந்து 77,174 புள்ளிகளாக வர்த்தகமாகின்றன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன.

பங்குகள் விலை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 287 புள்ளிகள் சரிந்து 23,974 புள்ளிகளில் வர்த்தகமாகின்றன.

Source link