இந்திய பெண்கள் அணி ஏமாற்றம் * ஒருநாள் தொடரை இழந்தது

ஹோபர்ட்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 5 விக்கெட்டில் ஆஸ்ரேலியாவிடம் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோற்றது. நேற்று இரண்டாவது போட்டி ஹோபர்ட் நகரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இரண்டு அரைசதம்

இந்திய அணிக்கு பிரதிகா, ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது, ஸ்மிருதி (31) அவுட்டானார். ஜெமிமா 11 ரன் எடுத்தார். அரைசதம் அடித்த பிரதிகா, 52 ரன்னில் வெளியேறினார். தீப்தி (1), அமன்ஜோத் கவுர் (13), ரிச்சா (22), காஷ்வீ (25) உள்ளிட்டோர், சீரான இடைவெளியில் அவுட்டாகினர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 54 ரன் எடுத்து உதவினார். இந்திய அணி 50 ஓவரில் 251/9 ரன் எடுத்தது.

ஜார்ஜியா சதம்

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா (6), லிட்ச்பீல்டு ஜோடி துவக்கம் தந்தது. அடுத்த இணைந்த லிட்ச்பீல்டு (80), ஜார்ஜியா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்தது. சதம் அடித்த ஜார்ஜியா 101 ரன்னில் அவுட்டானார். பெத் மூனே (31) கைகொடுக்க வெற்றி எளிதானது. ஆஸ்திரேலிய அணி 36.1 ஓவரில் 252/5 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 0-2 என தொடரை இழந்தது.

Source link