இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
டேரில் மிட்செல்
இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் 89 ரன்களும் (52 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்). பின் ஆலென் 40 ரன்களும் (25 பந்து, 5 சிக்சர்) எடுத்தனர்.
இந்திய அணி
பின்னர் 199 இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷியும். அபிஷேக் ஷர்மா வும் களம் புகுந்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய இவர்கள் முதல் ஓவரிலேயே 26 ரன்கள் சேகரித்து அமர்க்களப்படுத்தினர். தொடர்ந்து நியூசிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். பந்து இடைவிடாது சிக்சர், பவுண்டரிக்கு ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ ஹைலைட்ஸ் போல் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. 2.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டிய இந்தியா 5 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. இதற்கிடையே அபி ஷேக் ஷர்மா 15 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.
‘பவர்-பிளே’ யான முதல் 6 ஓவர்களில் சூர்யவன்ஷி – அபிஷேக் ஜோடி 118 ரன்கள் திரட்டி புதிய வரலாறு படைத்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ‘பவர்-பிளே’ யில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு 2001-ம் ஆண்டில் செர்பியாவுக்கு எதிராக ருமேனியா 5.4 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட் சமாக இருந்தது.
அணியின் ஸ்கோர் 133-ஆக (7.1 ஓவர்) உயர்ந்த போது சூர்யவன்ஷி 45 ரன்களில் (19 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) பிஷரின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.
மறுமுனையில், ருத்ரதாண்டவமான பேட்டிங்கால் நியூசிலாந்து பவுலர்களை கதறடித்த அபிஷேக் ஷர்மா 35 பந்துகளில் 4-வது சதத்தை நிறைவு செய்தார். தனது முந்தைய அதிவேக சதத்தை சமன் செய்ய (30 பந்தில்) ஒரு சிக்சர் தேவைப்பட்ட போது. அபிஷேக் சற்று தடுமாறி விட்டார்.
செஞ்சுரிக்கு பிறகு மேலும் ஒரு சிக்சர், பவுண்டரி தெறிக்க விட்ட அபிஷேக் ஷர்மா. ஜாமிசனின் அதே ஓவரில் கேட்ச் ஆகிப் போனார். அபிஷேக் 113 ரன்களில் (38 பந்து, 9 பவுண்டரி. 11 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 5 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தோல்வி
தோல்வி தொடர்பாக பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்சேல் சான்ட்னர் கூறியதாவது,
அவர்கள் அதிரடியாக விளையாடத் தொடங்கிவிட்டால், அவர்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இதை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்; ஐபிஎல் தொடரிலும் பார்த்திருக்கிறோம். இன்று இரவு நியூசிலாந்திலும் அதை நேரடியாகக் கண்டோம். பந்துவீச்சைத் தொடங்கிய ஆரம்பத்திலேயே நான் சில விஷயங்களைச் சரியாகச் செய்யத் தவறிவிட்டேன் என்று நினைக்கிறேன். மீண்டும் ஒருமுறை டாஸில் தோற்றுவிட்டோம். இருப்பினும், டேரில் மிட்செல் மற்றும் பிஜே வாட்லிங் இணைந்து அமைத்த பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. அந்த நேரத்தில் அவர்கள் 200 ரன்களை எட்டுவார்கள் என்று தோன்றியது. அந்த மாதிரியான ஆடுகளத்தில் 200 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர். கடைசி சில ஓவர்களில் அவர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். குறிப்பாக, யார்க்கர் பந்துகளைத் துல்லியமாக வீசி எங்களுக்கு ரன் எடுப்பதைக் கடினமாக்கினர். எனவே, அவர்களின் ஆட்டத்தைப் பொறுத்தவரை ஓரளவுக்குத் திருப்தியாக இருக்கிறேன்.
இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். பனிப்பொழிவு தொடங்கியதும் பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிடும். இந்த வகையான கிரிக்கெட் போட்டிகளில் பவர்பிளே மிகவும் முக்கியமான பகுதியாகும். பவர்பிளே ஓவர்களில் எப்படி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை அவர்கள் சிறப்பாகச் செய்து காட்டினர்.என்றார்.
