இந்திய வர்த்தக கொள்கை டபிள்யு.டி.ஓ.,வில் ஆய்வு

உலக வர்த்தக அமைப்பில், இந்தியாவின் வர்த்தக கொள்கை குறித்த எட்டாவது ஆய்வு கூட்டம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், நம் நாட்டின் வர்த்தக கொள்கைகள் குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது.

இதற்கு முன்னதாக, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் உறுப்பினர் சுர்ஜித் புஜபால் தலைமையிலான இந்திய குழுவினர், சுங்கத்துறையில் இந்தியா மேற்கொண்டுள்ள டிஜிட்டல் சீர்திருத்தங்கள் குறித்து உலக வர்த்தக அமைப்பில் இந்த வாரம் விளக்கியுள்ளனர்.

இதற்கு முன், இந்தியாவின் வர்த்தக கொள்கை குறித்த ஏழாவது ஆய்வு கூட்டம் கடந்த 2021ல் ஜெனீவாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Source link