இந்து சமய அறலையைத்துறையில் அதிரடி மாற்றம்- ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என முக்கிய கோயில்களில் புதிய ஆணையர்கள் – tamil nadu govt hindu religious and charitable endowments department joint commissioner transferred

இந்து சமய அறலையைத்துறையில் ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி காட்டியுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தின் மிக முக்கிய கோயில்களுக்கும் புதிய இணை ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காண்போம்.

இந்து சமய அறலையைத்துறையில் 21 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி காட்டியுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தின் மிக முக்கிய கோயில்களுக்கும் புதிய இணை ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய திருக்கோயிகள் விபரம்

ராமேஸ்வரம் – ராமநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம் – அரங்கநாதசுவாமி திருக்கோயில் மதுரை – மீனாட்சி அம்மன் திருக்கோயில் அழகர்கோயில் – கள்ளழகர் திருக்கோயில் சமயபுரம் – மாரியம்மன் திருக்கோயில் மயிலாப்பூர் – கபாலீஸ்வரர் திருக்கோயில்என தமிழகத்தின் சுற்றுலா வாசிகள், பொதுமக்கள் என அதிகம் கூட்டம் கூடும் கோயிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணையர்கள் விபரம்

ராமேஸ்வரம் – ராமநாதசுவாமி திருக்கோயில்: மதுரை மண்டல இணை ஆணையராக இருந்த சி.மாரியப்பன் இனி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் புதிய இணை ஆணையர் / செயல் அலுவலர். ஸ்ரீரங்கம் – அரங்கநாதசுவாமி திருக்கோயில்: திருவண்ணாமலை இணை ஆணையராக இருந்த பிரகாஷ் இனி உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு ஆனையராக நியமனம் செய்யப்பட்டுள்ளர். மதுரை – மீனாட்சி அம்மன் திருக்கோயில்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்த சுரேஷ் இனி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் புதிய இணை ஆணையர். அழகர்கோயில் – கள்ளழகர் திருக்கோயில்: துணை ஆணையராக இருந்து இணை ஆணையராக பதவி உயர்வு பெற்ற பொன்னமணி, கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயிலுக்கு நியமனம். சமயபுரம் – மாரியம்மன் திருக்கோயில்: துணை ஆணையராக இருந்து பதவி உயர்வு பெற்ற நித்யா, புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நியமனம். மயிலாப்பூர் – கபாலீஸ்வரர் திருக்கோயில்: துணை ஆணையராக இருந்து பதவி உயர்வு பெற்ற அன்னக்கொடி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு நியமனம்.சேலம் மண்டல இணை ஆணையராக இருந்த ரத்தினவேல் பாண்டியன் திருநெல்வேலி மண்டல இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு, மொத்தம் 18 இணை ஆணையர்கள் மாறுதல், 3 பேருக்கு பதவி உயர்வுடன் கோயில் பொறுப்பு என தமிழகத்தின் முக்கிய கோயில்கள் அனைத்திலும் புதிய நிர்வாகம் வந்துள்ளது.

Source link