இந்தோனேசியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா நாட்டின் மொலுக்கா கடற்பகுதியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. அதோடு வடக்கு சிலபேசி பகுதியில் உள்ள கட்டடங்கள் இடிந்துள்ளன. மேலும் சில பகுதிகளிலும் கட்டடங்கள் குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பலரும் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வுகள், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு சுனாமி அலைகள் உருவானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
