காஞ்சிபுரம்: ”இந்த சட்டசபை தேர்தல், மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கும்,” என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தரிசனம் செய்தார். உலகளந்த பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில் ஆகியவற்றில் தரிசனம் செய்த பின், அவர் அளித்த பேட்டி:
தமிழக மக்களுக்கு, நிச்சயமாக நல்லது நடக்கும். தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிக்கு மேல் கைப்பற்றி, மகத்தான வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். இந்த தேர்தல், மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கும். மக்களுக்கு, துணை நிற்போம். எங்கள் கூட்டணி பலமாக உள்ளது.
தி.மு.க., கூட்டணியில், இன்னும் ஓரிரு நாளில், எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விபரம் அறிவிக்கப்படும். கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின், தே.மு.தி.க., வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
