இந்த தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை பேசுபொருளாகவும், இதுவரை வெளிவந்த தேர்தல் அறிக்கைகளிலேயே சூப்பர் ஸ்டாராகவும் உள்ளது. விவசாயி களுக்கான கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்து, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இல்லை என்ற ஒரு குறையை, விவசாயிகள் பலர் என்னிடம் தெரிவித்தனர். அந்த வாக்குறுதியை வெளியிட வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம் நாங்கள் கேட்டுள்ளோம்.
அதற்கு, ‘புதிதாக வந்திருக்கும் கூட்டுறவு சட்டப்படி, மத்திய அரசு அனுமதி கொடுத்தால் தான், கடனை தள்ளுபடி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மத்திய அரசு அனுமதி தராவிட்டால், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. எனவே தான், அந்த வாக்குறுதியை வழங்கவில்லை’ என, எங்களிடம் முதல்வர் ஸ்டாலின் விளக்கி கூறினார்.
– சண்முகம்
மாநில செயலர், மா.கம்யூ.,
