இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?

ஊழல் அற்ற ஆட்சி விஜய் தருவார்!

நா ன் இந்த தடவை தெளிவா இருக்கேன். என் ஓட்டு த.வெ.க.,-வுக்குத்தான். ‘விஜய்க்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கு?’ன்னு மத்த கட்சிக்காரங்க கேக்குறாங்க. எனக்குத் திருப்பி கேட்க ஒரு கேள்வி இருக்கு. இத்தனை வருஷமா அனுபவம்னு சொல்லிட்டு ஆட்சி பண்ணவங்களோ, அவங்களோட வாரிசுகளோ என்ன பண்ணிட்டாங்க?

விஜய் அண்ணா அரசியலுக்கு வந்தா, நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் வரும்னு நம்பறேன். சீமானுக்கு ஓட்டு வங்கி அதிகமாகுதுன்னு தெரிஞ்ச உடனே, அவர் மேல இல்லாத பழியெல்லாம் போட்டாங்க. அதே வேலையைத்தான் இப்ப விஜய் அண்ணா மேலயும் பண்றாங்க. அவர்மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஏத்துக்கவே முடியாது. இது முழுக்க முழுக்க அவரோட தனிப்பட்ட வாழ்க்கை. ஆனா அதை வச்சு அரசியல் பண்றது சரியில்லை.

மத்த கட்சிகள்ல வேட்பாளர் யாரு, ஜாதி என்னன்னு பார்ப்பாங்க. ஆனா த.வெ.க-.,வுல ‘விஜய்’ங்கிற அந்த ஒரு முகத்துக்காகவே நாங்க ஓட்டு போடுவோம். அவர் சொன்ன திட்டங்கள்ல ஒரு நேர்மை தெரியுது.

முதல் அஞ்சு வருஷம் அவரோட இமேஜுக்காக ஓட்டு போடுறோம்னா, அடுத்த அஞ்சு வருஷம் அவர் செஞ்ச சாதனைகளுக்காக ஓட்டு போடுவோம்.


-எம்.திருசபரீஸ், 20,

சமூகப்பணி மாணவர், திருப்பூர்

அண்ணாமலையை மாற்றியது தவறு!

இது என் முதல் ஓட்டு. தற்போது தி.மு.க., தமிழகத்தில் வலுவாக உள்ளது. முக்கிய அரசியல் கட்சியினர், கூட்டணியில் இருப்பது தான் காரணம். அ.தி.மு.க., வலுவாக இல்லை. அதேபோல், அரசியல் வாழ்க்கைக்கு, விஜய் தகுதியான நபரல்ல. அவர் சிறந்த நடிகர். அதுதான் அவரது அடையாளம். அவரால் சரியான வழிநடத்தல் மற்றும் நல்ல நிர்வாகத்தை தர இயலாது. கரூர் சம்பவம் துவங்கி, எந்த பிரச்னையையும் அவர் முறையாக கையாளவில்லை.

இளம் தலைவர்கள் வரிசையில், அண்ணாமலைக்கு கட்டாயம் ஆதரவு தெரிவிப்போம். தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அவரை மாற்றி, மத்திய பா.ஜ., பெரிய தவறு செய்துவிட்டது. அவர் இருந்திருந்தால், அவருக்குத்தான் ஓட்டு போட்டுருப்பேன்.

எனவே, அவரை போல் படித்த தலைவர்கள் இடம்பெறும் கூட்டணி அல்லது சுயேச்சை கட்சிக்கு என் ஆதரவை தெரிவிப்பேன். முதல்முறை ஓட்டு போடுவோர், இதை பின்பற்றினால் நன்றாக இருக்கும். ஏனெனில், படித்த தலைவர்கள் தான் எதிர்கால தமிழகத்தை மாற்றுவர். நா.த.க.,வில் மட்டும் தான், படித்த இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

– ஜெயபிரியா, 22,கல்லுாரி மாணவி, ராஜபாளையம்

Source link