இன்னுமா அவன் நினைப்புல இருக்கீங்க த்ரிஷா?: பாவப்படும் ரசிகர்கள் – fans console trisha krishnan after checking her insta story

த்ரிஷா லாக் ஸ்கிரீன்: த்ரிஷா கிருஷ்ணன் தன் வீட்டில் வளர்ந்து வரும் இஸ்ஸியை சொந்த மகளாகவே பார்க்கிறார். இஸ்ஸிக்கு முன்பு ஜோரோ எனும் செல்லத்தை மகனாக வளர்த்து வந்தார். அந்த மகன் 2024ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று அதாவது டிசம்பர் 25ம் தேதி இறந்துவிட்டது. மகன் இறந்ததை இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார் த்ரிஷா.

ஜோரோ இறந்த பிறகு சோகத்தில் வீட்டிலேயே அவர் முடங்கியபோது தான் இஸ்ஸி கிருஷ்ணன் வந்தது. இந்நிலையில் தான் ஒர்க்அவுட் செய்தது குறித்து Whoop ஆப்பில் இருந்து வந்த நோட்டிஃபிகேஷனை இன்ஸ்டா ஸ்டோரியாக வெளியிட்டுள்ளார். அதில் அவரின் ஐ போன் லாக் ஸ்கிரீனாக ஜோரோவின் புகைப்படம் இருக்கிறது.
த்ரிஷா மகன்: ஜோரோவை பார்த்ததுமே ரசிகர்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. மகன் இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் லாக் ஸ்கிரீனாக அவன் புகைப்படத்தை வைத்திருக்கிறீர்களே?. அம்மாக்களுக்கு மகன்கள் தான் ஸ்பெஷல் என்பது தெரியும். இருந்தாலும் இது வேண்டாமே. ஜோரோவை மறக்கச் சொல்லவில்லை. இஸ்ஸி புகைப்படத்தை வைக்கலாமே என்று தெரிவித்துள்ளனர்.

இஸ்ஸி வந்ததால் மூவ் ஆன் ஆகிவிட்டீர்கள் என்று நினனைத்தால் இன்னும் மகன் நினைப்பில் தான் இருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். இஸ்ஸி தங்கள் வீட்டிற்கு வந்த முதல் பிறந்தநாளை கூட ஜோரோவின் உடலை அடக்கம் செய்த இடத்தில் தான் கொண்டாடி புகைப்படங்கள் வெளியிட்டார் த்ரிஷா.
டெடி மகள்: இஸ்ஸி வேறு யாரும் அல்ல விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா வீட்டில் இருக்கும் டெடி செல்லத்தின் மகள் தான். இதை கட்டா குஸ்தி 2 படத்தை விளம்பரம் செய்தபோது தெரிவித்தார் விஷ்ணு விஷால். இதற்கு முன்பு இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. த்ரிஷா எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டார் என நினைக்கிறேன். அவரும், என் மனைவியும் நெருங்கிய தோழிகள் என மேலும் தெரிவித்தார்.

இஸ்ஸி கிருஷ்ணனுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். அதில் பலர் பிரபலங்கள் ஆவர். விஜய்ணாவின் பிறந்தநாளுக்கு அவர் இஸ்ஸியை தூக்கி கொஞ்சிய புகைப்படத்தை வெளியிட்டு த்ரிஷா கடந்த ஆண்டு வாழ்த்தியதால் அந்த செல்லம் இன்னும் பிரபலமாகிவிட்டது.
த்ரிஷாவும், சிலுவையும்: இந்நிலையில் 44 வயதில் தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்கிற ஓப்ரா வின்ஃப்ரேயின் வீடியோவை ஸ்டோரியாக போட்டு Amen என்று சொன்னார் த்ரிஷா. அதை பார்த்தவர்கள் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தார்கள். அதாவது இந்து மதத்தை சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன் ஏன் Amen சொல்கிறார், தன் காரில் ஏன் சிலுவை வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
முன்னதாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தபோது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்த த்ரிஷா காரில் சிலுவை இருந்ததை பார்த்து கேள்வி கேட்டார்கள். தற்போது amen-க்காக கேட்கிறார்கள். கிறிஸ்தவ பள்ளியில் படித்தவர் சிலுவை வைத்திருப்பதிலும், Amen சொல்வதிலும் ஆச்சரியம் இல்லை.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இதற்கிடையே நான் நடிகையாகவே மாட்டேன்பா என கறாராக சொல்லிவிட்டு நடிக்க வந்துவிட்டீர்களே என த்ரிஷாவிடம் பெப்சி உமா கேட்ட பழைய வீடியோ தற்போது வைரலாகியிருக்கிறது. மாடலிங் செய்த காலத்தில் நடிப்பு வேண்டாம் என்கிற முடிவில் தான் இருந்தார் த்ரிஷா. அதன் பிறகு நடிக்க வந்ததுடன் மட்டுமில்லாமல் வெற்றிகரமான நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link