இரட்டை வேடம்!
மேற்கு வங்கத்தில் சுதந்திரமாக தொழுகை நடத்தலாம். ஆனால், பூஜை செய்யவோ அல்லது பந்தல் அமைக்கவோ அனுமதி அளிக்கப்படுவதில்லை. இது துரதிருஷ்டம். மத வழிபாட்டு நடவடிக்கைகளில் ஆளும் திரிணமுல் காங்., இரட்டை வேடம் போடுகிறது. இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும்.
நிதின் நபின் பா.ஜ., தேசிய தலைவர்
எதிர்கொள்ள தயார்!
உலகளவில், ஹைதராபாதை கார் பந்தய வரைபடத்தில் இடம் பெற செய்யவே, கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, 49 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டது. இது, வங்கிகளுக்கு இடையே நடந்த பணப் பரிமாற்றம். இதை ஊழலாக சித்தரிப்பதை ஏற்க முடியாது. எதையும் எதிர்கொள்ள தயார்.
கே.டி.ராமா ராவ் செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி
அனைத்தும் கற்பனையே!
என்னையும், என் மனைவியையும் பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவரது கற்பனையே. இது அவரது பலவீனத்தை காட்டுகிறது. அரசியலுக்காக தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதற்கு இதுவே சான்று.
கவுரவ் கோகோய் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
