நேபிள்ஸ்: இத்தாலியில் சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரர் சுமித் நாகல் (‘நம்பர்-278’), ஜெர்மனியின் ஹென்றி ஸ்கொயரை (‘நம்பர்-258’) எதிர்கொண்டார்.
முதல் செட்டை சுமித் நாகல் 7-5 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 3-6 என இழந்தார். வெற்றியாளரை முடிவு செய்த மூன்றாவது செட்டை சுமித் நாகல் 6-4 என வசப்படுத்தினார்.
2 மணி நேரம், 44 நிமிடம் நீடித்த போட்டி முடிவில் சுமித் நாகல் 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் இத்தாலியின் போன்டியோலியை சந்திக்க உள்ளார்.
