இரண்டு நாட்களில் விலை 30% வீழ்ச்சி

‘மல்டி கமாடிட்டி சந்தை’யில் வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களில் 30 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜன., 29ம் தேதி வெள்ளி ஒரு கிலோவின் விலை 4.20 லட்சம் ரூபாயாக உச்சம் கண்டது. அதன் தொடர்ச்சியாக, இறங்குமுகத்தில் பயணித்த வெள்ளி விலை ஜன., 30ம் தேதி இரவு 2.91 லட்சம் ரூபாயாக வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

குறிப்பிட்ட சதவீதத்துக்கும் மேல் விலை கீழே இறங்காமல் தடுப்பதற்காக பங்கு அல்லது கமாடிட்டி பொருட்கள் வர்த்தகத்துக்கு ‘லோயர் சர்கியூட்’ வைக்கப்படும். அதைப்போலவே, ஜன., 30ம் தேதியன்று வெள்ளி வர்த்தகத்தின் இடையே லோயர் சர்கியூட் ஆனது.

இரண்டு நாட்களில் வெள்ளி கிலோவுக்கு கிட்டத்தட்ட 1.30 லட்சம் ரூபாய் சரிந்தது. முதலீட்டாளர்கள் அதிகளவில் லாபத்தை பதிவு செய்ததே விலை வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்பட்டது. இதுதவிர, அமெரிக்க டாலர் மதிப்பு சற்று வலுவடைந்ததும் வெள்ளி, விலை குறைய காரணமாக அமைந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link