புதுடில்லி: வங்கிகள் அளித்த சில்லரை கடன்களில், நகைக்கடனின் பங்களிப்பு, கடந்த ஜனவரியில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட ஒட்டுமொத்த சில்லரை கடன்களில் நகைக்கடனின் பங்களிப்பு, கடந்த, 2025 ஜனவரியில் 3 சதவீதமாக இருந்தது.
இது, நடப்பாண்டு ஜனவரியில் இரட்டிப்பாகி, 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்ததால், நகைக்கடன் மதிப்பு, ஆண்டு ஒப்பீட்டில் 128.80 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
