இலங்கை கடல் பகுதியில் ரூ.500 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

கொழும்பு,

இலங்கை மாத்தறை தலல்ல கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த அந்நாட்டு பிளாஸ்டிக் படகு ஒன்றை கடற்படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த படகில் 21 பைகள் இருந்தன. அதில், 10 பைகளில் 275 கிலோ ஐஸ் போதைப்பொருட்களும், 11 பைகளில் 200 கிலோ ஹெராயினும் இருப்பது தெரியவந்தது.

கடற்படையினரை கண்டதும் படகு மற்றும் போதைப்பொருட்களை போட்டுவிட்டு கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இதைதொடர்ந்து 475 கிலோ போதைப்பொருட்களையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.500 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Source link