இளவேனில் 'ஹாட்ரிக்' தங்கம்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்

புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதல் கலப்பு அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் இந்தியாவின் இளவேனில், அர்ஜுன் ஜோடி தங்கம் வென்றது.

டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் (‘ரைபிள்”https://www.dinamalar.com/”பிஸ்டல்’) சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடக்கிறது. கலப்பு அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில், அர்ஜுன் பாபுதா ஜோடி 632.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த பைனலில் அசத்திய இந்திய ஜோடி, 505.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது. இது, இம்முறை இளவேனில் வென்ற ‘ஹாட்ரிக்’ தங்கம். ஏற்கனவே இவர், பெண்களுக்கான தனிநபர், அணிகள் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

ஜூனியர் கலப்பு அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு பைனலில் இந்தியாவின் ஷம்பவி, ஹிமான்ஷு ஜோடி (502.4 புள்ளி) தங்கம் வென்றது.

ஆண்களுக்கான 25 மீ., ‘ஸ்டேன்டர்ட் பிஸ்டல்’ பிரிவில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் குர்பிரீத் சிங் (575.16 புள்ளி), ஹர்ஷ் குப்தா (571.14), அமன்பிரீத் சிங் (569.11) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். இதன் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் சூரஜ் சர்மா (576.13), முகேஷ் (559.8), தனிஷ்க் (557.10) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

பெண்கள் அணிகளுக்கான 25 மீ., ‘பிஸ்டல்’ பிரிவில் ஈஷா சிங், மனு பாகர், ரிதம் சங்வான் அடங்கிய இந்திய அணி, 871.32 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது.

இதுவரை 11 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என, 20 பதக்கம் வென்ற இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Source link