இஸ்ரேல் பிரதமருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு

ஜெருசலேம்:ஈரான் மீதான போர் நிறுத்த முடிவை இஸ்ரேல் ஆதரிப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். போர் நிறுத்தத்திற்கு ஈரான் வைத்த நிபந்தனைகளில், லெபனான் மீதான போர் நிறுத்தமும் ஒன்று.

இந்த நிபந்தனைக்கு ஆதரவு தெரிவித்ததாக பெஞ்சமின் நெதன்யாகுவை, இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

ராணுவம் தன் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றியது; பொதுமக்கள் மன உறுதியைக் காட்டினர். ஆனால், நெதன்யாகு அரசியல் ரீதியாகவும், தன் கடைமையை நிறைவேற்றுவதிலும் தோல்வி அடைந்துவிட்டார்.

தேசியப் பாதுகாப்பின் முக்கிய விஷயங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டபோது, ​ இஸ்ரேல் அந்த விவாத மேசையில் கூட இருக்கவில்லை. இதுபோன்ற ஒரு அரசியல் பேரழிவு ஒருபோதும் நிகழ்ந்ததில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link