இஸ்லாமாபாத்: ” அமெரிக்காவுக்கு இந்தியாவால் தான் ஆபத்து உள்ளது. அது எங்களுக்கு தெரியும்,” என இந்தியாவிற்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பஷீத் கூறியுள்ளார்.
பட்டியல்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவரான துளசி கப்பார்ட், உலக நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வளர்ந்து வரும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்து சமர்ப்பித்த அறிக்கையில் ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தானையும் மிக முக்கியமான அணுசக்தி அச்சுறுத்தலாக அவர் பட்டியலிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி
இது தொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்த அப்துல் பஷீத் கூறியதாவது: துளசி கப்பார்ட் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பாகிஸ்தான் எதிர்ப்பு என்பது இந்தியாவில் முக்கியமானது. எங்களின் ஏவுகணைகளை துளசி கப்பார்ட் பார்த்துள்ளார். ஆனால், இந்தியாவின் அக்னி 5, 6 ஐ அவர் பார்க்கவில்லை. அவை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகள். அதுபோன்ற ஏவுகணைகள் எங்களிடம் இல்லை. அது போன்றவை வேண்டும். குறைந்தபட்சம் இஸ்ரேலை தாக்கும் அளவக்கு வேண்டும்.
அமெரிக்காவின் கூட்டாளியாக இந்தியா உள்ளது. அமெரிக்கா உடன் பாகிஸ்தானுக்கு நல்லஉறவு உள்ளது என நினைத்தோம். டிரம்ப் அதிபரான பிறகு உறவு மேம்பட்டது உண்மை. ஆனால், அமெரிக்காவிற்கு நீண்ட கால கூட்டாளியாக பாகிஸ்தான் மாற முடியாது. சீனாவும், பாகிஸ்தானும் கூட்டாளிகள் போல் இந்தியாவும் அமெரிக்காவும் உள்ளன. டிரம்ப்பிடம் என்ன மாதிரியான பலன்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கூட்டாளியாக மாற வேண்டும் எனநினைக்க முடியாது. அக்னி5 , அக்னி 6 ஏவுகணைகளை குறிப்பிட்தாது தவறு என நினைக்க வேணடாம். இந்தியாவை பார்ப்பதுபோன்று பாகிஸ்தானை அமெரிக்கா பார்க்காது.
யோசிக்க மாட்டோம்
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்கள் மீது அமெரிக்கா குறிவைக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் எங்கள் முன் உள்ள வாய்ப்புகள் என்னவாக இருக்கும். இந்தியா மீது தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. எங்கள் மீது பார்வையை திருப்பினால், மும்பை மற்றும் டில்லியை தாக்குவது குறித்து இரண்டுமுறை யோசிக்க வேண்டியது தேவை இருக்காது. என்ன நடக்கும் என்பதை பிறகு பார்த்து கொள்வோம். எந்த வாய்ப்பும் இல்லாமல் அமெரிக்கா எங்களை தாக்கினால், எங்கள் மீது மோசமான பார்வையை கொணடால் இந்தியாவை தாக்குவதை தவிர வேறு வழியில்லை என்பது உலக நாடுகளுக்கு தெரியும்.
எங்களிடம் குறைந்த அளவிலான ஏவுகணைகளே உள்ளன. அமெரிக்காவிற்கு இந்தியாவால் தான் அச்சுறுத்தல் என்பது எங்களுக்கு தெரியும். இந்தியா அத்துமீற நினைத்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம். சூழ்நிலை மோசமானால் மும்பையும், டில்லியில் எங்கும் இருக்காது. அந்நகரங்கள் நீண்ட தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
