இஸ்லாமாபாத்: சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான மையம் வெளியிட்ட பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த அமைப்பானது, 163 நாடுகளில் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட தாக்கத்தை அடிப்படையாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது.
அதில், ஆப்கானிஸ்தானுடன் மோசமான உறவை கொண்டுள்ள பாகிஸ்தான், தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான்(டிடிபி), பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு(பிஎல்ஏ) ஆகியவற்றால் அந்நாட்டிற்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1,045 பயங்கரவாத சம்பவங்கள் காரணமாக 1,139 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் டிடிபிபயங்கரவாத அமைப்பு அதிக தாக்குதலை நடத்துவதாகவும், அதற்கு அடுத்த இடத்தில் பிஎல்ஏ அமைப்பு உள்ளதாகவும் அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச பட்டியலில் , உலகளவில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 70 பாகிஸ்தான், புர்கினோ பசோ, நைஜீரியா, நைஜர் மற்றும் காங்கோ ஆகிய நாடுகளில் பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ளது எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
