இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் டி.டி.பி., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், ராணுவ வீரர்கள் உட்பட 16

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் டி.டி.பி., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், ராணுவ வீரர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தான், மறுபக்கம் ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் பஜவூர் மாவட்டம் மலங்கியில் உள்ள சோதனை சாவடி மீது வெடிபொருள் நிரம்பிய வாகனம் ஒன்றை மோதி வெடிக்கச் செய்தனர். இதில் செக் போஸ்ட் முழுதும் தரைமட்டமானது.

அருகிலிருந்த மதரஸா கட்டடமும் முற்றிலும் இடிந்து விழுந்தது. டி.டி.பி., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், ராணுவ வீரர்கள் 9 பேர் உட்பட, 16 பேர் உயிரிழந்தனர்.

Source link