இஸ்லாமாபாத்: மேற்காசியாவில் தொடரும் போரால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க, நம் அண்டை நாடான

இஸ்லாமாபாத்: மேற்காசியாவில் தொடரும் போரால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளம் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

எரிபொருள் விலை உயர்வு காரணமாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் 5 முதல் 30 சதவீதம் வரை குறைக்க அனுமதிக்கப்படுகிறது.

எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சிக்கன நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் சேமிப்பு முழுதும் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

அரசு வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு, 50 சதவீதம் குறைக்கப்படும். அடுத்த இரண்டு மாதங்களில், 60 சதவீத அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link