இ – மெயில் அனுப்ப கவர்னர் வலியுறுத்தல்

புதுடில்லி:வடக்கு டில்லியில் உள்ள கமலா நகர் மார்க்கெட்டிற்கு நேற்று சென்ற துணை நிலை கவர்னர் தரண்ஜீத் சிங் சாந்து, பெண்களை சந்தித்து, தனக்கு இ – மெயில் மூலம் குறைகள், குற்றங்கள் ஏதும் இருந்தால், அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வடக்கு டில்லி மாவட்டத்தில் உள்ள கமலாநகர் மார்க்கெட்டிற்கு நேற்று சென்ற கவர்னர் தரண்ஜீத் சிங் சாந்து, தன் பள்ளிப் பருவத்தில் இந்த பகுதியில் குடியிருந்ததை நினைவு கூர்ந்தார்.

அப்போது அவர், பெல்ட் வாங்க இந்த பகுதிக்கு வந்ததையும், அப்போது அளவு சரியில்லாமல் திரும்ப வந்ததையும் கூறினார். சில பெண்கள் மற்றும் வர்த்தகர்களின் பெயர்களை கூறி, அவர்களை அழைத்து பேசினார்.

பின், அவர் அந்த பெண்களிடம் கூறும் போது,’எனக்கு இ – மெயில் மூலம் புகார்களை அனுப்பலாம். என்ன பணிகள், எந்த அளவுக்கு நிறைவேறியுள்ளது என்பது குறித்து, விளக்கமாக பதில் அளிக்கிறேன்’ என்றார்.

Source link