ஈரானின் அணுஆயுதங்களைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டம்

வாஷிங்டன்: மேற்காசியாவில் நடந்து வரும் போர் காரணமாக நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரானிடம் உள்ள அணுஆயுதப் பொருட்களைக் கைப்பற்றுவது தொடர்பாக அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் பிடிகொடுக்காததால் தான் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை துவக்கியது. 22வது நாளாக நீடித்துள்ள இந்தத் தாக்குதலானது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை நிலவுவதால், இந்தப் போர் எப்போது முடிவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே, அமெரிக்கா தனது இலக்குகளை அடையப்போகும் நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், தற்போது போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஈரானிடம் உள்ள அணுஆயுதப் பொருட்களைக் கைப்பற்றுவது தொடர்பாக அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருவதாக சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஈரானின் அணு ஆயுதப் பொருட்களை மீட்பதற்காக அமெரிக்காவின் ரகசிய ராணுவப் பிரிவான ஜாயிண்ட் ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் கமாண்ட் வீரர்களைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனினும், அதிபர் டிரம்ப் இதுவரை இது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஈரானிடம் சுமார் 972 பவுண்டு எடையுள்ள, 6 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானவை கடந்த ஆண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அணுசக்தி மையங்களுக்கு அடியில் புதைந்துள்ளன.

Source link