ஈரானின் மிக உயரமான பாலம் அழிக்கப்பட்டது: ட்ரம்ப்

இந்தச் சூழலில் ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ‘முற்றுப்பெறாத பாலங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு சொந்தமான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, ஈரானியர்களைச் சரணடையச் செய்யாது. இது, நிலைகுலைந்துபோன ஒரு எதிரியின் தோல்வியையும், தார்மிக வீழ்ச்சியையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது,” என்று தெரிவித்தார்.

பி1 பாலம் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அவசர மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருந்த வேளையிலேயே, இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி கூறியது.

கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் உள்ள ‘B1’ பாலம், 447 அடி உயரமுள்ள தூணைக் கொண்டுள்ளதாகவும், மேற்கு ஆசியாவிலேயே மிக உயரமான பாலம் இதுவே என்றும் ‘ஃபார்ஸ்’ உள்ளிட்ட ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Source link