தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதால் ஈரானில் எங்கள் சகோதரர்கள் பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கின்றனர்.
எனவே தமிழக மீனவர்களை சிறப்பு விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் விரைந்து மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவினர் மனு: ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள், தமிழகம் திரும்ப முடியாமல் ஈரானில் சிக்கி தவிக்கின்றனர்.
