ஈரானில் தாக்குவதற்கு ஒன்றுமில்லை; போர் விரைவில் முடிவுக்கு வரும்: டிரம்ப்

வாஷிங்டன்: ஈரானில் தாக்குவதற்கு ஒன்றும் இல்லை. விரைவில் போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் மீதான போர், 11வது நாளாக தொடர்ந்தது. இந்தப் போரால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கும் கச்சா எண்ணெய் வினியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண் ணெய் விலை அதிகரித்து, அமெரிக்காவில் பொருளாதார அழுத்தம் அதிகரித்து வருகிறது. அங்கும், பெட்ரோல், டீசல் விலை பெரும் உயர்வைக் கண்டுள்ளது. இது அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், போர் நீடித்தால் அரசியல் ரீதியான பின்னடைவு ஏற்படும் என்ற அச்சமும் நிலவுகிறது. டிரம்ப் சமீபத்தில் பேசிய போது, போர் விரைவில் முடிவடையும் என்றும், ராணுவம் பெரும்பாலான இலக்குகளை அடைந்து விட்டது என்றும் கூறினார். ஆனால், தேவைப்பட்டால் மேலும் தாக்குதல்கள் நடத்தத் தயார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு என எதுவும் இல்லை. இதனால், விரைவில் போர் முடிவுக்கு வரும் எனக்கூறியுள்ளார்.

Source link