ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்கா- ஈரான் இடையில் இரண்டு வார போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் எப்போது வேண்டுமென்றாலும் முறிவடையலாம் என்ற நிலையில்தான் இருக்கிறது.

இதற்கிடையே இரண்டு நாடுகளுக்கும் இடையில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை 21 மணி நேரம் நீடித்த போர் நிறுத்த பேச்சுவார்த்தை உடன்படிக்கை எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது. இதனால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா? என்ற அச்சம் நிலவி வருகிறது.

அதேவேளையில் சீனா 3-வது நாடு மூலமாக ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவலை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரம் இல்லாது எனக் கூறியுள்ளது.

இந்த நிலையில் ஈரானுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டம் வழங்கினால், சீனா மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Source link