“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!”

மாஸ்கோ: ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ரஷ்யா விசுவாசமான நண்பராகவும், நம்பகமான கூட்டாளியாகவும் தொடர்கிறது என்று விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ஈரானின் புத்தாண்டை முன்னிட்டு அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி, அதிபர் மசூத் பெஷெஷ்கியான் ஆகியோருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஈரானிய மக்கள் கடுமையான சோதனைகளை கண்ணியத்துடன் கடந்துவர வேண்டும் என விளாடிமிர் புதின் வாழ்த்தினார்.

மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் ஈரானின் விசுவாசமான நண்பனாகவும், நம்பகமான கூட்டாளியாகவும் ரஷ்யா தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஈரானுக்கான ரஷ்ய உதவிகள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

Source link