ஈரான் சரணடையும் வரை ஒப்பந்தம் கிடையாது : டிரம்ப்

வாஷிங்டன்: ” ஈரான் நிபந்தனையின்றி சரண் அடையும் வரையில் அந்நாட்டுடன் ஒப்பந்தம் கிடையாது,” என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரான் நிபந்தனையின்றி சரண் அடையும் வரையில் அந்நாட்டுடன் ஒப்பந்தம் கிடையாது. அதன் பிறகு சிறந்த மற்றும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர்களாகிய நாங்கள் நமது சிறந்த கூட்டாளிகள், நண்பர்கள் இணைந்து, ஈரானை அழிவின் பிடியில் இருந்து மீட்டு கொண்டு வரவும், பொருளாதார ரீதியில் பெரியதாகவும், சிறந்த நாடாகவும் முன்பை விட வலிமையாகவும் மாற்ற அயராது பாடுபடுவோம். ஈரானுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. ஈரனை மீண்டும் உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் தாக்குதல் 7 வது நாளை கடந்துள்ளது. இந்த மோதலை நிறுத்த மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக ஈரான் அதிபர் கூறியிருந்தார். ஆனால், மத்தியஸ்தர்கள், போரை துவக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் தான் கூற வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தான், ஈரான் சரண் அடையும் வரை ஒப்பந்தம் போட மாட்டோம் என டிரம்ப் கூறியுள்ளார்.

Source link