ஈரான் பதில் தாக்குதல்: இஸ்ரேலில் 11 பேர் உயிரிழப்பு

டெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 11 பேரும், அமெரிக்க வீரர்கள் 4 பேரும் இதுவரை பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே மூன்றாவது நாளாக இன்றும் மோதல் ஏற்பட்டது. இந்த மூன்று நாட்களில், ஈரானில் பொதுமக்கள் உட்பட 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக மினாப் நகரில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்று தாக்கப்பட்டதில் மாணவியர் உட்பட 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெஹ்ரான் உட்பட 131 நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக, இஸ்ரேல், குவைத் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதில் இஸ்ரேலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4 பேர் பலி

ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. போரின் முதல் நாள் நடத்தப்பட்ட தாக்குதலில் காயம் அடைந்த வீரர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டதாக, அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

Source link