ஈரான் மீது நடத்தப்பட்ட போர் எதிரொலி; அமெரிக்காவில் சரியும் ட்ரம்ப்பின் செல்வாக்கு

கடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2025 ஆண்டு ஜனவரி 20 நாள் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார் டொனால்ட் ட்ரம்ப். இவர் அதிபராகப் பொறுப்பேற்ற நாள் முதல் இருந்தே அரசின் செலவுகளைக் குறைக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் பல்வேறு வகையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  

இருப்பினும், மேற்காசியப் போரில் தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு ஈரான் மீது போர் தொடுத்ததால், அமெரிக்கா மிகப் பெரிய அளவிலான பொருளாதார சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, இந்த போரில் மேற்காசிய நாடுகளில் இருந்த அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் மிகப் பெரிய அளவிலான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலையும் அதிகரித்தது, அமெரிக்க மக்களிடையே டிரம்ப் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த நிலையில், கடந்த வாரம் அதிபர் ட்ரம்ப்பின் பணிகள், செயல்பாடுகள் மற்றும் மக்களிடையே அவருக்கு உள்ள செல்வாக்கு குறித்து ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சாஸ் அமைப்புகள் கருத்துக் கணிப்பு நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பில் ட்ரம்ப்பிற்கான செல்வாக்கு 40 சதவீதம் அளவு இருந்தது. இந்நிலையில், மீண்டும் நேற்று (25-03-26) நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அது 36 சதவீதமாகக் குறைந்துள்ளது. 

இதற்கு, ஈரான் மீது அமெரிக்க நடத்திய தேவையில்லாத போர் தான் காரணம் என்று கூறப்படுகிறது.  இரண்டு முறை அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப்பின் செல்வாக்கு  இந்த அளவிற்குக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Source link